Office Assistant , Management Assistant (Non-Tech) , Management Assistant (Technical), Driver, Internal Audit Officer, Assistant Director
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு - இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு
- உதவிப் பணிப்பாளர்/பிரதிப் பணிப்பாளர் வகுப்பு II (நிர்வாகம்)
- உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் வகுப்பு II
- முகமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) வகுப்பு III
- முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு III (தொழில்நுட்பம் சாராது)
- சாரதி III ஆம் தரம் (Pl-3)
- அலுவலக உதவியாளர் iii ஆம் தரம்
1️⃣உதவிப் பணிப்பாளர் வகுப்பு II (நிர்வாகம்)
⏬தகைமைகள் :
1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டம் அல்லது சமூக விஞ்ஞாளம் அல்லது முகாமைத்துவம் அல்லது மனிதவள முகாமைத்துவம் தொடர்பான பட்டம் பெற்றிருத்தல் அத்துடன் பட்டம் பெற்றதன் பின்னர் அரச, அரச கூட்டுத்தாபன. நியதிச்சட்ட சபை என்பவற்றில் குறித்த துறையில் முகாமைத்துவ மட்ட பதவியில் குறைந்தது 05 வருட அனுபவம் பெற்றிருத்தல்.
2. 2026.05.01 ஆம் திகதிக்கு வயது 32 வருடங்களுக்கு குறையாமலும் 45 வயதிற்கு அதிகரிக்காமலும் இருத்தல், உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு வயதெல்லை கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது.
3. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
4. சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல்.
5. தனது பதவிக்குரிய பொறுப்பை திறமையாக நிறைவேற்ற வேண்டியதோடு இலங்கையின் எப்பாகத்திலும் பணி புரிவதற்கான உடல் உள ஆரோக்கியத்துடன் இருத்தல்
▶சம்பள அளவு :
MM 1-3 Rs.96,650 10x2480, 15x3450-173,200 சேவை திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட அரச கொடுப்பனவுகள்+ EPF/ETF
2️⃣உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் வகுப்பு II
⏬தகைமைகள் :
1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வு, நிதி அல்லது வணிக நிர்வாகம், வணிக அல்லது கணக்கியல் துறையில் பட்டம் பெற்றிருத்தல்
2. அங்கீகரிக்கப்பட்ட பட்டய நிறுவனத்தில் இடைநிலை பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
3. 2026.05.01 ஆம் திகதிக்கு வயது 22 வருடங்களுக்கு குறையாமலும் 45 வயதிற்கு அதிகரிக்காமலும் இருத்தல். உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு வயதெல்லை கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது.
4. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
5. சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல்.
6. தனது பதவிக்குரிய பொறுப்பை திறமையாக நிறைவேற்ற வேண்டியதோடு இலங்கையின் எப்பாகத்திலும் பணி புரிவதற்கான உடல் உள ஆரோக்கியத்துடன் இருத்தல்
▶சம்பள அளவு :
JM 1-1 Rs.72.650/- 10x1360, 18x2040-122.970+ சேவை திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட அரச கொடுப்பனவுகள்+ EPF/ETF
3️⃣முகமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) வகுப்பு III
⏬ தகைமைகள் :
1. தொழில் மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப அல்லது தொழிற் பயிற்சி நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட தொழில்நுட்பத் துறையின் தேசிய தொழிற் தகைமை (NVQ) 05 ஆம் மட்டத்திற்குக் குறையாத மட்டத்திலான திறன் சான்றிதழ் பெற்றிருத்தல்.
2. உள்ளக விண்ணப்பதாரிகளும் மேற்குறித்த தகைமையை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
3. 2026.05.01 ஆம் திகதிக்கு வயது 18 க்கு குறையாமலும் 45 க்கு அதிகரிக்காமலும் இருப்பதோடு இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
4. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
5. சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல்.
6. தனது பதவிக்குரிய பொறுப்பை திறமையாக நிறைவேற்ற வேண்டியதோடு இலங்கையின் எப்பாகத்திலும் பணி புரிவதற்கான உடல் உள ஆரோக்கியத்துடன் இருத்தல
▶சம்பள அளவு :
MA 2-2 (50,540/-10x540-7x630-4x1080-20x1280 90,270/-) முகாமைத்துவ சேவை திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட அரச கொடுப்பனவுகள் EPFETF
4️⃣முகாமைத்துவ உதவியாளர் III (தொழில்நுட்பம் சாராது)
⏬தேவையான தகைமைகள் :
1. கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சையில் கணிதம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் போன்ற பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும். இலங்கை பிரஜைய இருத்தல் வேண்டும்.
3. கல்விப் பொது தராதரப் பத்திர உயர் தர பரீட்சையில் குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும். (பொது பரீட்சை தவிர்ந்து) உள்ளக விண்ணப்பதாரிகள் சேவையில் நிரந்தரமாகியிருத்தல் வேண்டும் அத்தோடு, குறித்த பதவி நிரந்தரமாக்கப்பட்டு ஆரம்ப நியமனத்தின் கீழ் உள்ள தரப்பினரில் 05 வருட தொடர்ச்சியான திருப்திகரமான சேவையை பூர்த்தி செய்திருத்தல்.
4. சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
5. தன் பதவிக்கு விதிக்கப்படும் காரியங்களை சிறப்பாக நிறைவேற்றக்கூடியவராகவும், இலங்கையின் எப்பிரதேசத்திலும் பணி புரிவதற்கான உடல் மற்றும் உள தகுதி உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
6. கணனி சம்பந்தமாக சிறந்த அறிவு உடையவராக இருத்தல் வேண்டும். (சிங்களம் தமிழ் ஆங்கிலம்)
▶சம்பள அளவு :
MA 1-2 (46.220-10x540-7x630-12x1080-12x1280 84,350/-)+ முகாமைத்துவ சேவை திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட அரச கொடுப்பனவுகள்-EPFETF
5️⃣சாரதி III ஆம் தரம் (Pl-3)
⏬தேவையான தகைமைகள் :
1. கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாதவாறு இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
2. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் விதியோகிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல் குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்தில் முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகனம் செலுத்துவதற்கான அனுமதி பெற்றிருப்பதோடு. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றதன் பின்னர் 03 வருட அனுபவம்
3. 2026.01.01 ஆம் திகதிக்கு வயது 18 க்கு குறையாமலும் 45 க்கு அதிகரிக்காமலும் இருத்தல் வேண்டும்.
4. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
5. சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
6.தன் பதவிக்கு விதிக்கப்படும் காரியங்களை சிறப்பாக நிறைவேற்றக்கூடியவராகவும், இலங்கையின் எப்பிரதேசத்திலும் பணி புரிவதற்கான உடல் மற்றும் உள தகுதி உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
▶சம்பள அளவு :
(67,040/-)-PL 3 (43.280-10x490-10x540-10x590-12x630 முகாமைத்துவ சேவை திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட அரச கொடுப்பனவுகள் EPF/ETF
6️⃣அலுவலக உதவியாளர் IIIஆம் தரம்
⏬தேவையான தகைமைகள் :
1. கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரண நர பரீட்சையில் தோற்றியிருத்தல் வேண்டும்.
2. 2026.01.01 ஆம் திகதிக்கு வயது 18 க்கு குறையாமலும் 45 க்கு அதிகரிக்காமலும் இருப்பதோடு இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
3. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
4. தன் பதவிக்கு விதிக்கப்படும் காரியங்களை சிறப்பாக நிறைவேற்றக்கூடியவராகவும். இலங்கையின் எப்பிரதேசத்திலும் பணி புரிவதற்கான உடல் மற்றும் உள தகுதி உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
5. சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
▶சம்பள அளவு :
PL 1 (40,500-10x450-10x490-7x540-15x590 62,530/-)
விண்ணப்பம் முடிவு திகதி : 29.05.2026
🔴எழுத்துமூல பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையின் பின்னரே ஆட்சேர்ப்பு செய்யப்படும்
🔵விண்ணப்பங்களை "2026 மே மாதம் 29 ஆம் திகதிக்கு" முன்னர் கீழ் காணும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும். கடித உறையின் இடப்பக்க மேல் மூலையில் தங்கள் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடவும்.
முகவரி:
தவிசாளர்,
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு,
இலக்கம் 129,
மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதி,
புதுக்கடை, கொழும்பு - 12.
📃Download Notice – Tamil
🔰Join Our WhatsApp Group – Click here
%20-%20JOB%20VACANCIES.jpeg)