Diploma in Sinhala for Tamil Speakers 2026 – University of Kelaniya
Applications
Invited for Diploma in Sinhala for Speakers of Tamil – September 2026 Intake
The University
of Kelaniya has opened applications for the Diploma in Sinhala for
Speakers of Tamil programme for the September 2026 intake.
This diploma has been developed specifically for Tamil-speaking students and working professionals who wish to strengthen their Sinhala language skills for academic studies, career advancement, and everyday communication.
Programme
Details
- Duration: 1 Year
- Course Fee: Rs. 75,000/=
- Lecture Mode: Physical and Online
About
the Programme
The
programme is designed to help Tamil-speaking learners build proficiency in reading,
writing, speaking, and understanding the Sinhala language. It aims to
enhance communication skills while providing learners with greater educational
and professional opportunities.
The
programme is particularly beneficial for:
- Employees in both the public
and private sectors
- Students planning to pursue
higher education
- Candidates preparing for
competitive examinations
- Individuals who wish to
improve their Sinhala language communication skills
Key
Features of the Programme
- Offered by the University of
Kelaniya
- Designed exclusively for
Tamil-speaking participants
- Emphasises practical use of
the Sinhala language
- Develops speaking, writing,
reading, and comprehension skills
- Supports both academic success
and career development
Entry
Requirements
Applicants
should possess:
- G.C.E. Advanced Level (A/L) qualifications, OR
- Any other qualification
recognized and accepted by the University.
Interested applicants are encouraged to submit their applications before the closing date specified in the official announcement. (31st July 2026)
தமிழ் மொழியைத்
தாய்மொழியாகக் கொண்டோருக்கான சிங்கள மொழி டிப்ளோமா – செப்டம்பர் 2026 மாணவர் சேர்ப்புக்கான
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
களனிப் பல்கலைக்கழகம், செப்டம்பர் 2026 மாணவர் சேர்க்கைக்காக,
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கான சிங்கள மொழி டிப்ளோமா (Diploma
in Sinhala for Speakers of Tamil) பாடநெறிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
தமிழ் மொழியைத்
தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள், கல்வி, தொழில் முன்னேற்றம்
மற்றும் அன்றாட தொடர்பாடலுக்குத் தேவையான சிங்கள மொழித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்
இப்பாடநெறி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாடநெறி
விபரங்கள்
- பாடநெறிக் காலம்: 01 ஆண்டு
- பாடநெறிக் கட்டணம்: ரூ. 75,000/=
- விரிவுரைகள் நடைபெறும் முறை: நேரடி (Physical) மற்றும் இணையவழி
(Online)
பாடநெறி
பற்றிய விபரம்
தமிழ் மொழியைத்
தாய்மொழியாகக் கொண்ட கற்பவர்களின் சிங்கள மொழி வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும்
புரிந்துகொள்ளும் திறன்களை மேம்படுத்தும் வகையில் இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொடர்பாடல் திறனை வலுப்படுத்துவதோடு, கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளையும்
விரிவுபடுத்த உதவுகிறது.
இப்பாடநெறி
பின்வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்:
- அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள்
- உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள்
- போட்டிப் பரீட்சைகளுக்குத் தயாராகும்
விண்ணப்பதாரர்கள்
- சிங்கள மொழியில் தொடர்பாடும் திறனை
மேம்படுத்த விரும்பும் அனைவரும்
பாடநெறியின்
சிறப்பம்சங்கள்
- களனிப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.
- தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட
கற்பவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நடைமுறைச் சிங்கள மொழிப் பயன்பாட்டிற்கு
முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- பேச்சு, எழுத்து, வாசிப்பு மற்றும்
புரிந்துகொள்ளும் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.
- கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு
பயனுள்ளதாக அமைகிறது.
விண்ணப்பிக்கத்
தேவையான தகைமைகள்
விண்ணப்பதாரர்கள்
கீழ்க்கண்ட தகைமைகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்:
- கல்விப் பொதுத்தராதர உயர்தர (G.C.E. Advanced Level) பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். அல்லது
- பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்
ஏதேனும் சமமான தகைமையைக் கொண்டிருக்க வேண்டும்.
