வியாபார முகாமைத்துவ இளமாணிப்பட்டம்
வெளிவாரிப்பட்டப்படிப்பு
- 2026 / 2027
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வெளிவாரிப்
பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்
கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படுவதுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி கற்கை நெறியின் 2024/25 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அனுமதிக்கான
தகைமைகள்:
(அ)
க.பொ.த (உ/த) வர்த்தகத்துறையில் சித்திபெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக
முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்
அல்லது
(ஆ)
க.பொ.த (உ/த) வர்த்தகத்துறை தவிர்ந்த
ஏதேனும் துறையில் சித்தி பெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்.
அல்லது
(இ)
இதனுடன் தொடர்புபட்ட ஒரு தொழில்சார் தகைமையைப்
பெற்றிருத்தல்.
அல்லது
(ஈ)
கிழக்குப் பல்கலைக்கழக மூதவையினால் அங்கீகரிக்கப்பட்ட கூடிய ஏதேனும் கல்விசார்/ தொழில்சார்/ தொழிற் பயிற்சிசார் தகைமையினைப் பெற்றிருத்தல்.
அத்துடன்
(i) க.பொ.த (உ/த) பரீட்சைக்கு 2024ம்
வருடம் அல்லது அதற்கு முந்திய வருடங்களில் தோற்றிய மாணவர்கள்.
(ii) இலங்கை
பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமைகள் பெற்றிருத்தல்.
1. அனுமதிக்கப்பட்ட
03 பாடங்களிலும் கூடியது 03 அமர்வுகளுக்கு மேற்படாமல் ஒரே அமர்வில் அனைத்துப்
பாடங்களிலும் குறைந்தது "S" தரச் சித்தியைப் பெற்றிருத்தல்.
2. க.பொ.த (உ/த) பரீட்சையில் பொதுச்
சாதாரணப் பரீட்சையில் (Common General
Test) குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல்.
தெரிவு
நடைமுறைகள்:
அனுமதிக்கான
தகைமைகளில் முதல் பிரிவிலுள்ளவர்களுக்கு (பிரிவு (அ)) முன்னுரிமை வழங்கப்படுவதுடன்
க.பொ.த (உ/த) பரீட்சையில் Z-புள்ளி
மற்றும் மொத்தப் புள்ளி முன்னுரிமை அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும்.
பாடநெறிக்கான
காலம் : 03 வருடங்கள்
மொழி
மூலம் : தமிழ்
பாடநெறிக்
கட்டணம் : 120,000
LKR
மூன்று
தவணைகளில் செலுத்த முடியும். (1ம் வருடம் - 60,000 LKR, 2ம் வருடம்
- 40,000 LKR, 3ம் வருடம் - 20,000 LKR) மற்றும் பணம் மீள செலுத்தப்படமாட்டாது.
விண்ணப்ப
நடைமுறைகள்:
http://www.cedec.esn.ac.lk/bbm எனும் இணையத்தளத்தில்
பிரவேசித்து விண்ணப்ப நடைமுறைகளையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரிகள்
இணையத்தளத்தினூடாக சரியான தகவல்களை விண்ணப்பித்தல் கட்டாயமாகும்.
முடிவுத்திகதி
: 15.05.2026
மேலதிக
விபரங்கள்
:
சிரேஷ்ட
உதவிப் பதிவாளர்
வெளிவாரிப்
பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்குப்
பல்கலைக்கழகம், இலங்கை, இல.50, புதிய வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி:
065-2227025, மின்னஞ்சல்:
cedecinfo@esn.ac.lk
இணையம்:
http://www.cedec.esn.ac.lk
பதிவாளர்
கிழக்குப்
பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.
12.04.2026
1️⃣👉Online Application - Apply
2️⃣👉Join Our WhatsApp Group - Click Here

