Apply for the 2026/27 Romanian Undergraduate Scholarships for Sri Lankan students. Offered by the Government of Romania through the Ministry of Education. Open for 2024/2025 A/L students.
ரொமேனிய இளங்கலை புலமைப்பரிசில் – 2026/27
🔽பொதுவான தகைமைகள்:
🔵விண்ணப்பதாரர் இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்.
🔵2024 அல்லது 2025 ஆம் ஆண்டு உயர்தர (A/L) பரீட்சையில் எந்தவொரு பாடத்துறையிலும் குறைந்தது 3 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
🔵ஆங்கில அறிவு: சாதாரண தரத்தில் ‘C’ சித்தியும், உயர்தரத்தில் ‘S’ சித்தியும் பெற்றிருத்தல் அவசியம்.
🔵இலங்கை அரச பல்கலைக்கழகம் ஒன்றில் உள்வாரி மாணவராகத் தெரிவு செய்யப்பட்டு, தற்போது கல்வி கற்பவராகவோ அல்லது பதிவு செய்தவராகவோ இருக்கக்கூடாது.
🔵நல்ல ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.
🔶ஏற்கனவே ரொமேனிய அரசாங்கத்தின் இளங்கலை புலமைப்பரிசிலைப் பெற்றவராக இருக்கக்கூடாது.
🔽புலமைப்பரிசில் சலுகைகள்:
■கற்பித்தல் மற்றும் பதிவுக்கட்டணங்கள் இலவசம்.
■மாணவர் விடுதி வசதி (வரம்பிற்குட்பட்டது).
■மாதாந்தக் கொடுப்பனவாக 925lei(181 EURO) வழங்கப்படும்.
■அவசர மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உதவி.
🔴முக்கிய விபரங்கள்:
விண்ணப்பிக்கும் முறை: இணையத்தளம் வழியாக மட்டுமே (Online Only).
தெரிவு முறை: Z-Score மற்றும் நேர்முகப் பரீட்சை அடிப்படையிலாகும்
கடைசித் திகதி: 2026 மே மாதம் 12 ஆம் திகதி.
1️⃣👉 Apply – Click here
2️⃣👉 Join Our WhatsApp Group – Click here
🔰English Notice



