University Admission 2025/2026 – UGC – 2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்கோரல்

 2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கு  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) விண்ணப்பங்கோரல்.

2025 ஆம் ஆண்டு .பொ. (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை அரச பல்கலைக்கழக அனுமதிக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக (Online) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப ஆரம்பத் திகதி: 28.04.2026

விண்ணப்ப இறுதித் திகதி: 19.05.2026 (Closing date)

  • 2025 ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தர) பரீட்சையில் மொத்தமாக 281 810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
  • அப்பரீட்சார்த்திகளில் 221 413 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகளாகவும் 60 397 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளாகவும் காணப்பட்டனர்.
  • பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தகவலுக்கேற்ப பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தற்போது 176 527 பேர் பல்கலைக்கழக விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • தகுதி பெற்ற இவ்விண்ணப்பதாரிகளிலிருந்து மொத்தமாக 42 937 பேருக்கு மட்டுமே பல்வேறு கற்கைநெறிகளுக்கு பல்கலைக்கழக அனுமதிகள் வழங்கப்பட தீர்மானிக்கப்படுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்:

  • ஒரே அமர்வில் சகல 03 பாடங்களிலும்  குறைந்தது சாதரன சித்தி (‘S’ சித்தி) பெற்றிருத்தல் வேண்டும் (ஆகக்கூடுதலாக 3 அமர்வுகளுக்குள்)
  • பொதுச் சாதாரண வினாத்தாளில் (Common General Test) குறைந்தது 30% புள்ளிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
  • Z-புள்ளி அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ugc.ac.lk என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தினூடாக ஊடாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பதற்கான அனுமதி கையேட்டினை (Handbook) பெற்றுக்கொள்ளும் முறை:                        

  • 2025/2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேட்டினை 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
  • பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயலகம் -இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 7.
  • UGC யினால் நியமிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து 25 மாவட்டங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்
  • தபால் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் (விபரம் கீழே PDF யில்)

முக்கிய குறிப்புகள்:

  • க.பொ.த (உயர் தர) பரீட்சைக்கு மூன்று தடவைக்கு மேல் தோற்றியவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.
  • ஏற்கனவே உள்வாரி மாணவர்களாகப் பதிவு செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது
  • விண்ணப்பங்களை அனுப்பும்போது பதிவுத் தபாலில் (Registered Post) மட்டுமே அனுப்ப வேண்டும்
  • ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தில் 125 கற்கை நெறிகளை ஆகக் கூடியளவு விருப்பின் அடிப்படையில் தெரிவு செய்யலாம்.

விண்ணப்பிப்பதற்கான Handbook யினை நாடுமுழுவதிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பாகவும், விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல் தொடர்பாகவும் UGC யினால்  வெளியிடப்பட்டுள்ள PDF யினை தரவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க உள்ளவர்கள் UGC யினால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல் PDF யினை கீழேயுள்ள link யின் மூலம் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.

1️⃣👉  Download instruction PDF – Tamil | English

2️⃣👉  Join Our WhatsApp Group – Click here

எவ்வாறு விண்ணப்பித்தல் வேண்டும் என்பது தொடர்பாக UGC யினால் வெளியிடப்பட்ட Videos களையும் மூன்று மொழிகளிலும் பார்வையிடலாம். (link below)

👉  To watch Videos on How to Apply - Click here