Police Sub Inspector (SI) Vacancies 2026 – Sri Lanka Police - (Normal Service and STF)

 Police Sub Inspector (SI) Vacancies 2026 – Sri Lanka Police - (Normal Service and STF)

இலங்கை பொலிஸ் துறையில் உப பொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பெண்கள் உப பொலிஸ் பரிசோதகர் (WSI) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்.

இலங்கை பொலிஸ் துறையின் சாதாரண பொலிஸ் சேவை மற்றும் விசேட அதிரடிப்படை (STF) பிரிவுகளுக்கான உப பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector – SI) மற்றும் பெண்கள் உப பொலிஸ் பரிசோதகர் (Women Sub Inspector – WSI) பதவிகளுக்கு இலங்கை குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  • Police Sub Inspector (SI) – Normal / STF
  • Police Women Sub Inspector (WSI)

கல்வித்தகைமைகள்

  • .பொ. (சா/) பரீட்சையில் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் அதாவது, கணிதம், விஞ்ஞானம், சிங்களம்/தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட 05 பாடங்களில் திறமைச் சித்தி (C) கட்டாயம் பெற்றிருத்தல்.
  • .பொ. (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்- GCE Advanced Level - 3 Pass - Any stream

வயதெல்லை

விண்ணப்ப முடிவு தேதியன்று வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.தற்போது பொலிஸ் சேவையில் பணியாற்றுவோருக்கு அதிகபட்ச வயது 28 ஆகும்.

உடற்தகுதிகள்

விண்ணப்பதாரர்கள்:

  • குறைந்தபட்ச உயரம் 5 அடி 6 அங்குலம் (167.64cm) இருக்க வேண்டும்.
  • மார்பு அளவு குறைந்தபட்சம் 32 அங்குலம் இருக்க வேண்டும்.
  • நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் இருக்க வேண்டும்.
  • இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சேவையாற்றத் தயாராக இருக்க வேண்டும்.
  • திருமணமாகாதவராக இருக்க வேண்டும் (விவாகரத்து பெற்றோர், விதவைகள் அல்லது குழந்தைகள் உள்ளோர் தகுதியற்றவர்கள்)
  • பார்வை: கண்ணாடி இன்றி இரு கண்களிலும் 6/12 பார்வை (ஒரு கண் 6/6 எனின் மற்றையது 6/18 இருக்கலாம்)

மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்

உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கான ஆரம்ப சம்பளம் ரூ. 55,410 முதல் ரூ. 91,630 வரை வழங்கப்படும்.

வாழ்க்கை செலவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுடன் சேர்த்து அண்ணளவாக 120 700.20 ரூபாய் வரையில் வழங்கப்படலாம்.

தெரிவுப் பரீட்சை விபரங்கள்
விண்ணப்பதாரர்கள் ஓட்டப்பந்தயம், Push-up, Sit-up, Chin-up உள்ளிட்ட பல்வேறு உடற்திறன் சோதனைகளில் பங்கேற்க வேண்டும். 1000 மீட்டர் ஓட்டத்தை 5 நிமிடங்களுக்குள் நிறைவு செய்ய தவறினால் தகுதி நீக்கம் செய்யப்படும்.

எழுத்துத் தேர்வு பின்வரும் பாடங்களில் நடைபெறும்:

  • மொழித் திறன் மற்றும் புரிதல்
  • பொது அறிவு மற்றும் நுண்ணறிவு சோதனை

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் Online மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது:
  • பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
  • தேசிய அடையாள அட்டை (NIC).
  • கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் (O/L & A/L Certificates).
  • செல்லுபடியாகும் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம்.
  • வெள்ளை backround யில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவு வர்ண புகைப்படம்.
  • தற்போது அரச பணியில் இருப்பின், திணைக்களத் தலைவரின் அனுமதி கடிதம்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் இலங்கை பொலிஸ் கல்லூரியில் ஆரம்பப் பயிற்சி பெறுவார்கள். சேவையில் இணைந்த பின்னர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கட்டாய சேவைக்காலம் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி: 05.06.2026

இப்பதவி வெற்றிடம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான மேலதிக விபரங்களை கீழே Click செய்து பெற்றுக்கொள்ளலாம்.

👉 Download gazette  Click Here 
👉Apply online  – Click Here
👉Official Website -  Click Here

குறிப்பு:  தமிழ் மொழி வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதால் அவ் அறிவித்தல் வெளியானதும் இங்கு தரவேற்றம் செய்யப்படும்.