Calassie Job Vacancies 2026 – Sri Lanka Ports Authority (SLPA)

Calassie Job Vacancies 2026 – Sri Lanka Ports Authority (SLPA)


Calling Applications from Suitably Qualified Candidates for the following Job Vacancies – 2026 - Sri Lanka Ports Authority (SLPA)

இலங்கை துறைமுக அதிகாரசபையில் தகுதியுடைய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பதவி வெற்றிடங்கள் :-கலாசி 

தகைமைகள் :-க.பொ.த (சா.தரம்) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வில் கணிதம் மற்றும் மொழி உள்ளடங்கலாக ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் நீந்தும் ஆற்றல்

 சம்பளத் திட்டம் :-அடிப்படைச் சம்பளப் : . 33,815/= வருடாந்த சம்பள ஏற்றம் 5. 290/= (மொத்தச் சம்பளம் மாதாந்தம் ரூ. 109,000/= அளவினதாக இருக்கும்)

குறிப்பு :- சகல விண்ணப்பதாரிகளும் பதவிக்குரிய செயன்முறை மற்றும் நேர்முகப்பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

வயது :- 18-45 இற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும். (அரச சேவையின் விண்ணப்பதாரிகள், தொடர்பில் இவ் வயதெல்லை ஏற்புடையதல்ல)

🔽சகல விண்ணப்பதாரிகளும் :-

🔖 இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

🔖 பதவி தொடர்பில் ஒப்படைக்கப்படும் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுதல் போலவே நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கு அவசியமான உடல், உள தகுதியினையுடையவராக இருத்தல் வேண்டும்.

🔖 சிறந்த நடத்தையுடையவராக இருத்தல் வேண்டும்.

🔖நேர்முகக்குழுவின் தீர்மானத்தின் படி அல்லது பதவிக்கு அவசியமாயின் மருத்துவப் பரிசோதனையொன்றில் சித்தியடைதல் வேண்டும்.

🔖இப்பதவி நிரந்தரப் பதவியொன்றாவதுடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு உரித்துடையதாகும்.

🔖அரச அல்லது அரச கூட்டுத்தாபனங்களில் சேவையிலுள்ள அபேட்சகர்கள் தமது விண்ணப்பங்களை அவர்களின் திணைக்கள/கூட்டுத்தாபன தலைவர்கள் ஊடாக சமர்ப்பித்தல் வேண்டும். மேலே பதவிக்கு விண்ணப்பதாரி தெரிவு செய்யப்படின் குறித்த திணைக்களம்/ கூட்டுத்தாபனத்தின் சேவையிலிருந்து விடுவிக்க இணங்கும் குறிப்பொன்றும் இடப்பட்டிருத்தல் வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தினை பதிவுத் தபாலில் 2026.06.03ஆம் திகதிக்கு முன்னர் கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

பிரதான முகாமையாளர் (மனிதவளம் மற்றும் நிருவாகம்),
மனிதவளம் மற்றும் நிருவாகப் பகுதி,
இலங்கை துறைமுக அதிகாரசபை,
கொச்சிக்கடை,
கொழும்பு 13.

Closing Date: 03.06.2026

🔰 Download Notice  - Tamil |English 
🔰 Model Application  – Click here

🔰 Join Our WhatsApp GroupClick here