BOC -Trainee secretarial Assistant - Open Exam - Vacancies - 2026

 BOC -Trainee secretarial Assistant - Open Exam - Vacancies - 2026 


இலங்கை வங்கியில்  செயலாளர் உதவியாளர் - பயிலுநர் பதவி வெற்றிடங்களுக்கு திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
🔰அடிப்படைத் தகுதிகள்
இலங்கைப் பிரஜையாக இருக்கல் வேண்டும்
கல்வித்தகைமைகள்
  • க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் ஆங்கில மொழி உட்பட மூன்று (03) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங்களில் (விருப்பத்திற்குரிய பாடங்கள் தவிர்த்து) சித்தியடைந்திருக்குதல்   மற்றும்,
  • க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் ஒரே அமர்வில் இரண்டு (02) பிரதான பாடங்களில் (பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தவிர்த்து) சித்தியடைந்திருக்குதல்)
தொழில்முறை தகைமை: TVEC அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஆங்கிலத்தில் 6 மாத கால செயலாளர் பயிற்சி (Secretarial Practice) டிப்ளோமா/சான்றிதழ்.
ஏனையத் தகைமைகள் மற்றும் திறன்கள்

❖ நிமிடத்திற்கு 20 சொற்கள் என்ற வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்யக்கூடிய ஆற்றல். சிங்களம் / தமிழ் மொழித் தட்டெழுத்துக்களான சான்றிதழைக் கொண்டிருப்பது கூடுதல் தகைமையாகும்.
❖ ஆங்கிலம் மற்றும் சிங்களம் / தமிழ் மொழிகளில் எழுத, பேசுவதற்கான ஆற்றல்.
❖ இன்முகத்துடன் வெகு சுறுசுறுப்பாக தொடர்பாடும் ஆற்றல்.
❖ "MS - OFFICE" பயன்பாட்டில் பாண்டித்தியம்.

வயது எல்லை: 2024.06.27 அன்று  / விண்ணப்பம் முடிவுத் திகதியில் 28 வயதாக அல்லது அதற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

🔰விதிகளும் நிபந்தனைகளும்

❖ பயிற்சிக் காலம் (02) ஆண்டுகள் என்பதோடு அப்பயிற்சிக் காலப்பகுதிக்குரிய மாதாந்தக் கொடுப்பனவாக (1ஆம் வருடம் ரூ. 45,000/-, 2ஆம் வருடம் ரூ. 60,000/-) வழங்கப்படும்.

🔰தெரிவு நடைமுறை

போட்டித் தெரிவுப் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து நேர்முகப் பரீட்சையும் நடைபெறும். பரீட்சை பின்வரும் பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

அ. வினாத்தாள் I

கணினியில் ஆங்கிலத் தட்டச்சு வேகப் பரீட்சை (நிமிடத்திற்கு 20 சொற்கள்)

ஆ. வினாத்தாள் II

ஆங்கில மொழி

வினாத்தாள் I இல் (வேகப் பரீட்சையில்) சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே வினாத்தாள் II (ஆங்கில மொழி) பரீட்சைக்கு அழைக்கப்படுவர். போட்டிப் பரீட்சையில் பெறப்படும் புள்ளிகள், நேர்முகப் பரீட்சைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை அமைவுப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும். இறுதித் தெரிவானது நேர்முகப் பரீட்சையில் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் அமையும்.

விண்ணப்பமானது ஆன்லைனில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026.06.27

விண்ணபித்தல் மற்றும் மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள விபரங்களை பார்வையிடவும்.


📃Download Full Notice : Click here
📋Online Application   : Click here
🔰Join Our WhatsApp GroupClick here