OPEN COMPETITIVE EXAMINATION FOR COMPANY INSPECTOR OFFICER GRADE 3

Company Inspector job vacancies in the Department of Registrar of Companies
கம்பனிகள் பரிசோதகர் உத்தியோகத்தர் (தரம் III) போட்டிப் பரீட்சை - 2026

⭕இலங்கை அரசாங்கத்தின் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள கம்பனிகள் பரிசோதகர் உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

📌 முக்கிய விபரங்கள்:

​◽கல்வித் தகைமை: UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்ற ஏதேனும் ஒரு பட்டம்.

​◽வயதெல்லை: 21 - 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும் (1991.07.13 இற்குப் பின்னரும் 2005.07.13 இற்கு முன்னரும் பிறந்தவர்கள்).

​◽விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online) மூலம் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சைக் கட்டணம்: ரூபா 600.00

மொத்த வெற்றிடங்கள்: 06

📝 பரீட்சை முறைமை:

​இப்பரீட்சை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில ஆகிய மொழிகளில் நடைபெறும். பின்வரும் இரு வினாத்தாள்களுக்கும் ஒரே மொழி மூலத்தில் விடையளிக்க வேண்டும்.

​🔖மொழித் திறன் (Language Ability) - 100 புள்ளிகள் (02 மணித்தியாலம்)

​​🔖ஆற்றுகைத்திறன் (Aptitude/IQ) - 100 புள்ளிகள் (01 மணித்தியாலம்)

​ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் 40% புள்ளிகளைப் பெற்று திறமை வரிசையில் முன்னிலை பெறுபவர்கள் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.

💰 சம்பளம் மற்றும் சேவை தன்மை :

​🔽சம்பளம்: ரூ. 53,060 – 94,100  (MN-4/2025 அளவுத்திட்டம்)
🔽தன்மை: நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் உரித்துடையது
🔽பயிற்சி: 3 வருட தகுதிகாண் பருவம்.

🔴முக்கிய அறிவுறுத்தல்கள்

1. விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.
2. அடையாளத்திற்காக NIC, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அவசியம்.
3. அரசு ஊழியர்கள் திணைக்களத் தலைவரூடாக விண்ணப்பப் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி : 2026.07.13

பதிவாளர் நாயகம்,
நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களம், 
கொழும்பு 10.


📃Download Full Notice : Sinhala
📋Online Application :  Click here
🔰Join Our WhatsApp Group  : Click here