Free IQ Mock Exams With Cash Prizes - இலவச நுண்ணறிவு பரீட்சை பணப்பரிசில்களுடன்

 Free IQ Mock Exams With Cash Prizes - இலவச நுண்ணறிவு பரீட்சை பணப்பரிசில்களுடன்

🔊Ceylon Exams தளமானது அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவித்தல்கள், போட்டிப்பரீட்சைகளுக்கு அவசியமான கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், நுண்ணறிவு மற்றும் பொது அறிவு (IQ and GK) தொடர்பான தகவல்கள் , பல்கலைக்கழக கற்கைநெறிகள் தொடர்பான அறிவித்தல்கள், பரீட்டை பெறுபேறுகள், கற்கைநெறிகளுக்கான உள்நாட்டு மற்றும் புலமைபரிசில்கள் தொடர்பான அறிவித்தல்கள், முக்கியமான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும்  செய்திகள் என அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் ஒரே தளத்தின் கீழ் வழங்குகின்ற சேவையினை செய்தி வருகின்றது.

(Ceylon Exams is a platform that provides timely and comprehensive information under one roof, including government and private sector job vacancies, past papers and model papers for competitive examinations, Intelligence Quotient (IQ) and General Knowledge (GK) resources, university course announcements, examination results, local and international scholarship opportunities, important gazette notifications, and the latest news updates.)

அந்த வகையில் அரச தொழில் போட்டிப்பரீட்சைகள் மற்றும் சில பட்டக்கற்கைகளுக்கான தெரிவுப்பரீட்சைகளிலும் தவிர்க்க முடியாத ஒரு பரீட்சை விடயதானமாக இன்று நுண்ணறிவினை இனங்காணலாம்.

நுண்ணறிவு கற்கின்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இனிவரும் காலங்களில் Ceylon Exams தளமானது நுண்ணறிவு மாதிரிப்பரீட்சைகளினை (IQ Mock Exams) தொடராக நடாத்த தீர்மானித்துள்ளது. மேலும் அம்மாதிரி பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெறுவோருக்கும் பணப்பரிசில்கள் மற்றும் வெகுமதிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

இது  முற்றுமுழுதாக ஒரு சேவை நோக்கோடு மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

மாதிரிப்பரீட்சை தொடர்பான விபரங்கள்

🔰இது முற்றுமுழுதாக Ceylon Exams குழுமத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சை தொடராகும். இதில் எந்தவித வணிக நோக்கமோ அல்லது வேறு நிறுவனங்களின் அனுசரனையோ எதுவும் கிடையாது என்பதால் Ceylon Exams தள நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

📍நுண்ணறிவு பரீட்சை தொடரின் முதலாவது மாதிரி பரீட்சையானது 2026 ஜூன் 21ம் திகதி மாலை 7.00 தொடக்கம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கால பரீட்சை தொடர்பான விபரங்கள் Ceylon Exams வட்சப் குழுமத்தில் Update செய்யப்படும் என்பதால் தொடர்ந்து எம்மோடு குழுமத்தில் இணைந்திருங்கள்.

📍மாதிரிப்பரீட்சையானது Google Form முறைமையில் நடாத்தப்படும்.

📍மாதிரிப்பரீட்சைக்காக குறிக்கப்பட்ட நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்னர் Ceylon Exams வட்சப் குழுமத்தில் பரீட்சை Link பகிரப்படும்.

📍மாதிரிப்பரீட்சையானது 25 நுண்ணறிவு வினாக்களுடன் 30 நிமிட கால அளவினை கொண்டதாக அமையும்.

📍மாதிரிப்பரீட்சைக்கான Link ஆனது பிற்பகல் 7.00 தொடக்கம் 7.30 மணி வரை மட்டுமே செயலில் காணப்படும். அக்காலப்பகுதிக்குள் Link யினூடாக Google form படிவத்தில் நுழைந்து பரீட்சையினை 30 நிமிடங்களுக்குள் செய்து Submit செய்தல் வேண்டும்.  30 நிமிடங்கள் கடந்து submit செய்வதால் பரீட்சை பெறுபேற்றில் Rank செய்யப்பட மாட்டீர்.

📍பரீட்சை பெறுபேறுகளின் Rank யினை அடிப்படையாக வைத்து பரிசில்கள் வழங்கப்படும். Rank யினை தீர்மானிக்கையில் பரீட்சையில் பெற்றுக்கொண்ட கூடிய புள்ளி மற்றும் பரீட்சையினை நிறைவு செய்து Submit செய்வதற்கு எடுத்துகொண்ட காலம் என்பன கருத்திற்கொள்ளப்படும். (Highest marks order and Time Duration)

📢மாதிரி பரீட்சை பெறுபேற்றில் Rank யின் அடிப்படையில் பின்வருமாறு பணப்பரிசில்கள் வழங்கப்படும்

🥇 முதலாம் இடம் – ரூ. 3,000         | 1st place - 3000 Rs
🥈 இரண்டாம் இடம் – ரூ. 2,000    | 2nd place - 2000 Rs
🥉 மூன்றாம் இடம் – ரூ. 1,000       | 3rd Place  - 1000 Rs

🎁 அடுத்தடுத்த 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு – ரீலோட் பரிசுகள் வழங்கப்படும்.     | Other Consecutive 10 Places – Reloads

Mock Exam Date : 21 June 2026  at 7.00 Pm

Results and Winners List – 22nd June 2026

மாதிரிப்பரீட்சையின் பெறுபேறுகள் மற்றும் வெற்றிபெற்றோர் தொடர்பான விபரங்கள் 2026 ஜூன் 22ம் திகதி Ceylon Exams வட்சப் குழுமத்தில் வெளியிடப்படும்.

மாதிரிப்பரீட்சைக்கான Link மற்றும் Updates களை பெற்றுக்கொள்ள பின்வரும் Ceylon Exam வட்சப் குழுமத்தில் தொடர்ச்சியாக இணைந்திருங்கள்.

📢ஏதாவது ஒரு குழுமத்தில் இணைவது போதுமானதாகும்.

🔰Join Our WhatsApp Group 1  : Click here

🔰Join Our WhatsApp Group 2  : Click here