Winners List and Results - Free IQ Exam Series No: 01 - வெற்றியாளர்கள் விபரம் மற்றும் பெறுபேறுகள்

Winners List and Results - Free IQ Exam Series No: 01 - வெற்றியாளர்கள் விபரம் மற்றும் பெறுபேறுகள்

🎯Ceylon Exams யினால் 2026.06.21 இல் நடாத்தப்பட்ட பணப்பரிசில்களுடன் கூடிய இலவச நுண்ணறிவு மாதிரிப்பரீட்சை தொடர் இலக்கம் 01 யின் பெறுபேறுகளை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

✅இப்பரீட்சையானது தொடர் -1 மாத்திரமே. தொடர்-2 பரீட்சையினை நாம் ஜூலை மாத இறுதியில் நடாத்துவோம் என்பதால் தொடர்ந்து எம்மோடு இணைந்து பயன்பெறுங்கள்.

👉இது முற்றுமுழுதாக தற்காலத்தில் போட்டிப்பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களினை ஊக்கப்படுத்தும் நோக்கோடு மாத்திரமே நடாத்தப்படுகின்றது. இதில் எவ்வித வணிக விளம்பர நோக்கங்களோ கிடையாது. எனவே அனைவரும் பயன்பெறுவதோடு ஏனையவர்களுக்கும் எமது Ceylon Exams குழும Links யினை Share செய்து கொள்ளுங்கள்.

📑இலவச நுண்ணறிவு மாதிரிப்பரீட்சை தொடர் இலக்கம் 01 யின் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளையும் மாணவர்களின் நலன்கருதி இங்கு நாம் பதிவிடுகின்றோம்.

வினாக்கள்

1). 2025 ஒக்டோபர் மாதம் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தை தனது ஐந்தாவது  பிறந்தநாளை கொண்டாடுவது என்ன கிழமையிலாகும்?

1). செவ்வாய்

2). திங்கள்

3). புதன்

4). ஞாயிறு

2). ஒரு மனிதன் 10 kmh¹ எனும் வேகத்தில் அன்றி 14 kmh¹ இன்னும் வேகத்தில் நடந்தால் குறித்த நேரத்திற்குள் 20 km  அதிக தூரம் நடந்திருப்பான். அவன் சென்ற உண்மை தூரம் எத்தனை km?

1). 100 km  

2). 10 km   

3). 50 km   

4).  14 km

3). 102010 ÷ 1010 = 100?1 என்ற தொடர்பை பூர்த்தி செய்வதற்கு ? என்ற அடையாளமிடப்பட்டுள்ள இடத்தில் வரவேண்டிய குறியீடு?

1). x 

2). +  

3). —  

4).  ÷

4). 4 பச்சை, 9 வெள்ளை, 6 மஞ்சள் நிற ஒரே அளவான மாபிள்களிலிருந்து நிச்சயமாக மஞ்சள் நிற மாபிள்கள் இரண்டைப் பெற ஆக குறைந்தது எத்தனை மாபிள்களை பெட்டியில் இருந்து ஒரே தடவையில் எடுக்க வேண்டும்?

1). 19   

2). 13  

3). 15   

4). 10

5). COLOMBO என்பது DPMPNCP என்று எழுதப்படுமாயின், WATTALA என்பது எவ்வாறு எழுதப்படும்?

1). VZSSZKZ   

2). XBUUBMB  

3). ALATTAN   

4). MULLVLU

6). பின்வரும் சொற்களில் ஏனைய மூன்று சொற்களில் இருந்து வேறுபடும் சொல் எது?

1). பட்டினி   

2). வறுமை  

3). உபவாசம்   

4). விரதம்

7). பின்வரும் இரு சொற்றொடர்களில் ஆரம்ப சொற்றொடருக்கு சமமான தொடர்பை கொண்டதும் இரண்டாவது  சொற்றொடருக்கு பொருந்துமாறும் வெற்றிடத்துக்கு பொருத்தமான சோடியை கொண்ட விடையை தெரிவு செய்க.

............... : கோதுமை ; செங்கல் : ...............

A. தானியம்  

B. பாண்   

C. பயிர்ச்செய்கை   

D. விவசாயி

1. மதில்  

2. மேசன்  

3. போறணை 

4. களிமண்

1). B,1   

2). B,4   

3). C,3   

4). D,2

8). முதற்ச்சோடி சொற்களுக்குப் பொருத்தமான தொடர்பை காட்டும் சொற்சோடியைத் தெரிவு செய்க.

  எழுத்து - நெடுங்கணக்கு

1). நூலாசிரியர் - நூல்

2). சொல் - கருத்து வெளிப்பாடு

3). நாடகம் - நடனம்

4). சுரம் - சங்கீதம்

9). 0, 7, 26 , 63, 99, 124, 215 என்ற எண்களில் எவ்வண்ணை நீக்குவதன் மூலம் ஓர் எண்கோலம் உருவாகும்?

1). 99  

2). 215  

3). 0  

4). 26 

10). ஒரு நீர் தொட்டியை முற்றாக நிரப்புவதற்கு A எனும் குழாய் 6 நிமிடங்களையும் B எனும் குழாய் 3 நிமிடங்களையும் எடுக்கும். A,B ஆகிய இரு குழாய்களும் ஒருமிக்க திறந்துவிடப்படும் போது அத்தொட்டி முற்றாக நிரம்புவதற்கு எத்தனை நிமிடங்கள் எடுக்கும்?

1). 9   

2). 3   

3). 2  

4). 1.5

11). ரமணியின் தாய் லதா, வசந்தாவின் சகோதரி ரமணி, வசந்தாவின் தந்தை கணேசன். லதா கணேசனுக்கு என்ன உறவு முறை?

1). சித்தி   

2). சகோதரி  

3). மனைவி 

4). அம்மா

12). குமார் ஊர் புகைப்படத்தை காட்டி "எனக்கு சகோதரிகளோ சகோதரர்களோ இல்லை. ஆனால் இந்தப் படத்தில் இருப்பவரின் தந்தை எனது தந்தையின் மகன்" என்று கூறினார். அப்படத்தில் இருப்பவர் யார்?

1). குமாரின் தந்தை  

2). குமார்  

3). குமாரின் தந்தையின் மகன் 

4). குமாரின் மகன்

13). அமலன் கமலனிலும் பார்க்க விரைவாகவும் விமலனிலும் பார்க்க மெதுவாகவும் ஓடுகிறான். திலகன் அமலனிலும் பார்க்க விரைவாக ஓடுகிறான். பின்வரும் எக்கூற்று உண்மையானது?

1). கமலன் மிகவும் விரைவாக ஓடுகிறான்

2). விமலன் மிகவும் விரைவாக ஓடுகிறான்

3). திலகன் மிகவும் விரைவாக ஓடுகிறான்

4). அமலன் மூன்றாவது விரைவாக ஓடுகிறான்

14). ஒரு தொழிலதிபர் அவரது வீட்டில் அவரது அறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். போலீசார் அவரது வீட்டில் வேலை செய்பவர்களை விசாரித்த போது அவர்கள் பின்வருமாறு கூறினர்.

சமையல்காரி: நான் அப்போது சமையலறையில் இறைச்சி வெட்டிக் கொண்டிருந்தேன்.

தோட்டக்காரன்: நான் அப்போது தோட்டத்தில் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன்.

வேலைக்காரி: நான் அப்போது அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.

மூவரில் ஒருவரே கொலையாளி எனின் இக்கொலையை செய்தது யார்?

1). தோட்டக்காரன்

2). வேலைக்காரி

3). சமையல்காரி

4). கூற முடியாது

15). 50 உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவில் 39 பேரின் வயது 30 வருடங்களுக்கு மேற்பட்டதல்ல. 21பேரின் வயது 30 வருடங்களுக்கு குறைவானதல்ல எனின் சரியாக 30 வயதுடைய உறுப்பினர்கள் எத்தனை பேர் அக்குழுவில் உள்ளனர்.?

1) 6

2) 10

3) 5

4) 11

16). மகன் கடிகாரத்தை திருத்தியபின் காலை 10.00 மணியென நேரத்தை ஒழுங்குபடுத்திய பின் கடிகாரம் மணித்தியாலத்திற்கு 12 நிமிடங்கள் முந்தியோடுவதை அவதானித்தார். வீட்டு கடிகாரம் பி.ப 2.00 ஐ காட்டும் போது உண்மையான நேரம் யாதாக இருக்கலாம்?

1). பி ப 1.20

2). பி ப 2.20

3). பி ப 2.00

4). பி ப 1.00

17). 120 பேர் கொண்ட கூட்டத்தில் பெண்களை விட ஆண்கள் 26 பேர் அதிகம். அக்கூட்டத்தில் எத்தனை பெண்கள் இருந்தனர்?

1). 60

2). 47

3). 43

4). 73

18). 50 பல்தேர்வு வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரமொன்றில் எல்லா வினாக்களுக்கும் விடையளித்த ஒருவருக்கு ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டும், பிழையான ஒவ்வொரு விடைக்கும் 3 புள்ளிகள் வீதம் குறைக்கப்பட்டும் மொத்தமாக 130 புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தால் அவர் பிழையாக விடையளித்திருந்த வினாக்கள் எத்தனை?

1). 36

2). 25

3). 15

4). 10

19). தற்போது தந்தையின் வயது மகனின் வயதை போல் நான்கு மடங்காகும். ஐந்து வருடங்களின் பின் தந்தையின் வயது மகனின் வயதைப் போல் மூன்று மடங்காகும். எனில், தந்தை, மகன் ஆகியோரின் தற்போதைய வயதுகள் முறையே,

1). 10, 40

2). 5, 20

3). 60, 15

4). 40, 10

20). கீழே உள்ள கூற்றுகளையும் அவற்றை கொண்டு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் பற்றிய எத்தீர்மானத்திற்கு வரலாம்?

  • கூற்று 1: சில பேருந்துகள்  கார்கள் ஆகும்
  •   கூற்று 2: சகல கார்களும் உள்ளூருற்பத்திகள் ஆகும்.
  • முடிவு 1: சகல பேருந்துகளும் உள்ளூருற்பத்திகள் ஆகும்.
  • முடிவு 2: சகல கார்களும் பேருந்துகள் ஆகும்.

1). முடிவு 1 மாத்திரம் சரியானது

2). முடிவு 2 மாத்திரம் சரியானது

3). முடிவுகள் இரண்டும் சரியானவை

4). முடிவுகள் இரண்டும் பிழையானவை

21 - 25 வரையான வினாக்களுக்கு பின்வரும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விடையளிக்க.

தீரன், சுமேதா , நுவன், ரியாஸ் ஆகியோர் மருத்துவ, சட்ட, பொறியியல், தொழினுட்ப பீடங்களில் பயிலும், அனுராதபுரம், கண்டி, கொழும்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

> தீரன் கண்டியைச் சேர்ந்தவர் அல்ல.

> சுமேதா தொழிநுட்பபீடத்தையோ பொறியியல் பீடத்தையோ சேர்ந்த மாணவி அல்ல. அதேவேளை சுமேதா கண்டியைச் சேர்ந்தவரும் அல்ல.

> தீரன், நுவன் மருத்துவபீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் அல்லர்.  இவர்கள் இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்களும் அல்லர்.

>ரியாஸ் சட்ட பீடத்திலோ, தொழில்நுட்ப பீடத்திலோ கற்கவில்லை. இவர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் அல்ல.

> சுமேதா சட்ட பீடத்தைச் சேர்ந்த மாணவி அல்ல. அதேவேளை கொழும்பைச் சேர்ந்தவரும் அல்ல.

> மருத்துவ பீட, சட்ட பீட மாணவர்கள் அம்பாறையைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

21). சுமேதா எந்த பீடத்தில் கல்வி கற்பவர்?

1). தொழில்நுட்பபீடம்

2). மருத்துவபீடம்

3). சட்டபீடம்

4). பொறியியல் பீடம்

22). ரியாஸ் எந்த பீடத்தில் கல்வி கற்பவர்?

1). தொழில்நுட்பபீடம்

2). மருத்துவபீடம்

3). சட்டபீடம்

4). பொறியியல் பீடம்

23). சட்ட பீடத்தில் கல்வி கற்பவர் யார்?

1). தீரன்

2). சுமேதா

3). நுவன்

4). ரியாஸ்

24). அம்பாறையைச் சேர்ந்த மாணவர் யார்?

1). தீரன்

2). சுமேதா

3). நுவன்

4). ரியாஸ்

25). நுவன் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

1). அனுராதபுரம்

2). கண்டி

3). கொழும்பு

4). அம்பாறை

 

விடைகள்

1). 2

2). 3

3). 2

4). 3

5). 2

6). 2

7). 2

8). 4

9). 2

10). 3

11). 3

12). 4

13). 4

14). 2

15). 2

16). 1

17).  2

18). 4

19). 4

20). 4

21). 2

22). 4

23). 3

24). 1

25). 2

📢இலவச நுண்ணறிவு  மாதிரிப்பரீட்சை தொடர் இலக்கம் 01 யில் பணப்பரிசில்களை வென்ற வெற்றியாளர் விபரங்களை இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

🥇முதலாம் இடம்  - M.J.F. Rishadha - Puttalam

🥈இரண்டாம் இடம் -  R. Zameera - Kandy

🥉மூன்றாம் இடம் -  M. H. Sumaiya - Matara

🎁அடுத்து பத்து ரீலோட் வெற்றியாளர்கள்

  1. A. L. Ithikar - Ampara
  2. S. R. Hana - Ampara
  3. N. F. R. Aarah - Ampara
  4. M. M. Safras - Anuradhapura 
  5. S. Losana - Trincomalee
  6. V. Aththika - Batticaloa
  7. A. S. M. Siraj - Batticaloa
  8. M. C. F. Aseera - Kalutara
  9. M. F. Mahthiya - Batticaloa
  10. F. Fahmidha - Badulla

💸பணப்பரிசில்களை வென்ற வெற்றியாளர்களுக்கு Ceylon Exams நிர்வாகம் சார்பாக எமது வாழ்த்துக்கள்

இவ்வெற்றியாளர்களில் பலர் ஒரேயளவு புள்ளிகளை பெற்றிருந்தாளும் Rank யினை தெரிவு செய்கையில் பரீட்சை செய்து submit செய்வதற்கான நேரத்தினை நாம் கருத்திற்கொண்டுள்ளோம். 

பரீட்சையில் பங்கு பற்றிய ஏனையவர்களின் பெறுபேறுகளை கீழே உள்ள Link யில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்பரீட்சையானது தொடர் 1 மாத்திரமே. இரண்டாம் தொடர் பரீட்சையினை நாம் ஜூலை மாத இறுதியில் நடாத்துவோம் என்பதால் தொடர்ந்து எம்மோடு இணைந்து பயன்பெறுங்கள்.

இவ்வாறு போட்டிப்பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் நாம் பல Online பரீட்சைகளை தொடர்ந்து எதிர்காலத்தில் நடாத்தவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

ஏனையோருக்கும் எமது வட்சப் குழும Link யினை Share செய்து கொள்ளுங்கள். அனைவரும் பயன்பெறட்டும்.

தொடர்ந்து எமது வட்சப் குழுமங்களில் இணைந்து காத்திருங்கள்.

📋Download Result sheet IQ Exam No 1:  Click here 

🔰Join Our WhatsApp Group 1  : Click here

🔰Join Our WhatsApp Group 2  : Click here