RTI Commission Job Vacancies 2026 - Management Assistant, Translator (Tamil), Record Keeper, Officers (Development, Research, Legal, Finance)

RTI Commission Job Vacancies 2026 - Management Assistant, Translator (Tamil), Record Keeper, Officers (Development, Research, Legal, Finance) 

The Right to Information Commission of Sri Lanka is calling for applications from suitably qualified candidates to recruit for various vacant positions.

இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் பல்வேறு பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை தகவலறியும் உரிமை ஆணைக்குழுவில் கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் – 01
2. சட்ட அதிகாரி – 01
3. ஆய்வு உத்தியோகத்தர் – 01
4. நிதி உத்தியோகத்தர் – 01
5. அபிவிருத்தி உத்தியோகத்தர் – 04
6. மொழிபெயர்ப்பாளர் (தமிழ்) – 01
7. முகாமைத்துவ உதவியாளர் – 01
8. ஆவணக் காப்பாளர் – 01

மேலதிக விபரங்களை 2026.06.26 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலிலும் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

தகைமைகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தையும் சுயவிவரத்தையும் பதிவு தபால் மூலம் 2026 ஜூலை 13 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணிப்பாளர் நாயகம்,
தகவலறியும் உரிமை ஆணைக்குழு,
அறை இல. 203–204,
கட்டிடம் இல. 02,
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகம்,
கொழும்பு 07.

உறையின் மேல் இடது மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பின் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள Link யினை கிளிக் செய்வதன் மூலம் தொழில் அறிவித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்ப முடிவுத்திகதி: 2026 ஜூலை 13

📃Download Job Notice : Tamil | English | Sinhala
🔰Join Our WhatsApp Group 1Click here

🔰Join Our WhatsApp Group 2  : Click here