Meteorological Assistant Vacancies 2026 – Department of Meteorology-வளிமண்டலவியல் உதவியாளர் தரம் III

 Meteorological Assistant Grade III Vacancies 2026 – Department of Meteorology-வளிமண்டலவியல் உதவியாளர் தரம் III

The Department of Meteorology, operating under the Ministry of Defence, has called for applications from suitably qualified Sri Lankan citizens to fill vacancies for the post of Meteorological Assistant Grade III in the Primary Non-Technical Service Category.

Position Details

  • Post: Meteorological Assistant (Grade III)
  • Department: Department of Meteorology
  • Ministry: Ministry of Defence
  • Employment Type: Permanent and Pensionable

Eligibility Requirements

Applicants must:

  • Be a citizen of Sri Lanka.
  • Possess good moral character.
  • Be between 18 and 45 years of age as of 27 July 2026.
  • Have passed the G.C.E. Ordinary Level (O/L) Examination with six subjects, including at least two Credit passes, in not more than two sittings (excluding optional subjects)

 வளிமண்டலவியல் திணைக்களத்தில் வளிமண்டலவியல் உதவியாளர் (தரம் III) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தில், வளிமண்டலவியல் உதவியாளர் தரம் III பதவிகளுக்கு தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவி விபரங்கள்

  • அமைச்சு: பாதுகாப்பு அமைச்சு
  • திணைக்களம்: வளிமண்டலவியல் திணைக்களம்
  • பதவி: வளிமண்டலவியல் உதவியாளர் (தரம் III)
  • பணியின் தன்மை: நிரந்தரமும் ஓய்வூதிய உரிமையுடனும் கூடிய அரசுப் பணி
  • சம்பள அளவு: ரூ. 40,000 – 61,880/- (PL-1-2025 சம்பள அளவீடு)

சேவை நிபந்தனைகள்

  • நியமனத்தின் பின்னர் 03 ஆண்டுகளுக்குள் திறனாய்வு (EB) பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
  • முறைப்படி (Shift Basis) பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்.

முக்கிய பொறுப்புகள்

  • தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலக வளாகங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
  • வளிமண்டலவியல் அவதானிப்பு மற்றும் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுதல்.
  • தேவைக்கேற்ப முறைப்படி பணிப்பகுதிகளில் (Shift Duty) சேவையாற்றுதல்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்

கல்வித் தகுதி

  • க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மிகாமல், ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்து, அவற்றில் குறைந்தது இரண்டு (02) திறமைச் சித்திகள் (Credit Passes) பெற்றிருக்க வேண்டும்.

ஏனைய தகுதிகள்

  • இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
  • 2026.07.20 அன்று 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • நாட்டின் எந்தப் பகுதியிலும் கடமையாற்றக்கூடிய உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.07.27 (பி.ப. 4.15 வரை)
  • விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

பணிப்பாளர் நாயகம்
வளிமண்டலவியல் திணைக்களம்
இல. 383, பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07.

குறிப்பு: விண்ணப்பங்கள் பதிவுத் தபால் (Registered Post) மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் மற்றும் வர்ரத்தமானி அறிவித்தல் என்பவற்றை கீழே உள்ள Link யினை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

📃Download Job Notice : Tamil | English | Sinhala
📋Application Form  : Tamil | English | Sinhala
🔰Join Our WhatsApp Group 1Click here
🔰Join Our WhatsApp Group 2  : Click here