External degree Application- BBM, BA, B.COM University OF Jaffna - 2026
1️⃣கலைமாணிக் கற்கைநெறி
அனுமதிக்கான தகைமைகள்
க.பொ.த. உயர் தர பரீட்சை 2023 அல்லது அதற்கு முன்னர் அங்கீரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்து இருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% மான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள்.
அல்லது
NVQ Level-04, டிப்ளோமாக்கள், மொழி டிப்ளோமாக்கள், சான்றிதழ்கள்
அல்லது
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் மூதவையால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் தொடர்புடைய மற்றும் சமமானது என கருதப்படும் தகைமைகளைக் கொண்டவர்கள்
மாணவர்தெரிவு
விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சை அல்லது பொது உளச்சார்புப்பரீட்சை அல்லது இரண்டும் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
- க.பொ.த. (உ/த) பரீட்சை – 2024 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% ஆன புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
- பௌதீக விஞ்ஞானப்பிரிவு, உயிரியல் விஞ்ஞானப்பிரிவு, வணிகப்பிரிவு, கலைப்பிரிவு மற்றும் தொழினுட்பப்பிரிவு ஆகிய எப்பாடப் பிரிவினரும் விண்ணப்பிக்க முடியும்.
3️⃣வணிகமாணி சிறப்புக்கற்கைநெறி
- க.பொ.த. (உ/த) பரீட்சை (வணிகப்பிரிவு) – 2024 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியானவர்கள்.
- அல்லது பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு சமமான தகைமையைக் கொண்டவர்கள்
- விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் (Z-score) அல்லது பொது உளச்சார்புப்பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சை அல்லது மூன்றின் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள். பொது உளச்சார்புப் பரீட்சைக்கான தேவை ஏற்படின் பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
அனைத்து கற்கைகளுக்கும் பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள்
மாணவர்களின் விபரம் மற்றும் தகைமைகளை பரிசீலிக்க ஏதுவாக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதி நகல் செய்யப்பட்டு (Scan) JPG கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும்:
- தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
- க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் (2023 அல்லது அதற்கு முற்பட்டது) அல்லது NVQ Level-04 டிப்ளோமாக்கள், மொழி டிப்ளோமாக்கள், சான்றிதழ்கள்.
- திருமணச் சான்றிதழ் (திருமணமான பெண் விண்ணப்பதாரிகள் மட்டும்)
- விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000.00 இனை 890072140004088 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டினை (Payment Slip) பதிவேற்றப்படல் வேண்டும்.
விண்ணப்பப்படிவம்
இணையவழி விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் உள்ளீடு செய்வதனை உறுதி செய்யவும்.
மாணவர் தரவு முறைமைக்கு (Student Information System – SIS) https://www.odsis.jfn.ac.lk/guest இவ்விணைப்பினூடாக சென்று உங்களுக்கான கணக்கு (Create Account) ஒன்றை முதலில் உருவாக்கி கொள்ளுங்கள்.
அதனை தொடர்ந்து
1️⃣👉 BA - Online Application – Click here
2️⃣👉 BBM - Online Application - Click here
3️⃣👉 B.COM - Online Application – Click here
4️⃣👉 More Details - Click here
Join Our WhatsApp Group –Click here
தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் கற்கைநெறியின் பெயருடன் Batch (2024/2025)’ என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
- பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
