Judicial Clerk Grade III under the Judicial Management Assistant Service - Judicial Service Commission of Sri Lanka
The Judicial Service Commission of Sri Lanka has officially announced the open competitive examination for recruitment to the post of Judicial Clerk Grade III under the Judicial Management Assistant Service.Key Details :
- Post : Judicial Clerk Grade III
- Salary Scale : LKR 48,470 – 82,800
- Age Limit : 18 – 32 years
- Application Fee : LKR 400
- Exam Medium : Sinhala / Tamil
⏬நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III - (Judicial Clerk Grade III)
நீதிச் சேவை ஆணைக்குழு (JSC) – 2026 இந்த வர்த்தமானி அறிவித்தலானது நீதிச் சேவை ஆணைக்குழுவினால் (JSC) வெளியிடப்பட்ட, நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 பற்றிய முழுமையான விபரங்களை வழங்குகிறது.
🔽பதவி விபரம்:
பதவியின் பெயர் : நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III (Judicial Clerk Grade III)
சம்பள விபரம் (MN 2-2025) : ரூபா 48,470 – 10×540 – 11×630 – 10×1010 – 10×1190 – ரூபா 82,800.
வயது எல்லை : 05.06.2026 அன்று 18 – 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
🔽கல்வித் தகுதிகள்:
க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ் மொழி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்திகளுடன் (Credit passes), குறைந்தபட்சம் 04 திறமைச் சித்திகளையும் ஆங்கில மொழி(S) உட்பட மொத்தம் 06 பாடங்களில் சித்தியையும் பெற்றிருத்தல் வேண்டும்.
க.பொ.த (உயர் தரம்): ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி (பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஆங்கிலம் தவிர்ந்த).
🔽பரீட்சை முறைமை (Court Clerk Vacancies)
இரண்டு வினாத்தாள்கள் (தமிழ் அல்லது சிங்களத்தில் எழுதலாம்):
மொழித் திறன் (100 புள்ளிகள்): கருத்து வெளிப்பாடு,, கட்டுரை மற்றும் கடிதம்.
நுண்ணறிவு (100 புள்ளிகள்): கணித அறிவு மற்றும் தர்க்கரீதியான சிந்தனை.
சித்தியடைய ஒவ்வொரு பாடத்திலும் 40% புள்ளிகள் அவசியம்.
🔽விண்ணப்பக் கட்டணம் & வங்கி விபரம்
கட்டணம் : ரூபா 400/-
வங்கி:
மக்கள் வங்கி (People’s Bank), புறக்கோட்டை (Vielle Street) கிளை.
கணக்கு இலக்கம்:
297100199025039
வங்கிப் பற்றுச்சீட்டை (Receipt) விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டும்.
🔽விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பத்தை A4 தாளில் மாதிரிப்படிவத்தின் படி தயாரித்து, “Judicial Clerk Grade III Open Competitive Exam – 2026” என உறையின் மேல் குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பவும்.
முகவரி:
செயலாளர்,
நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகம்,
கொழும்பு 12.
விண்ணப்ப முடிவுத் திகதி : 2026 ஜூன் 05
